தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்கால் ஐயங்கார்ஸ் ஸ்வீட்சில் புதிய இனிப்பு, கார வகைகள் விற்பனை

காரைக்கால் ஐயங்கார்ஸ் ஸ்வீட்சில் புதிய இனிப்பு, கார வகைகள் விற்பனை

காரைக்கால் ஐயங்கார்ஸ் ஸ்வீட்சில் புதிய இனிப்பு, கார வகைகள் விற்பனை


UPDATED : நவ 06, 2026 09:32 PM

ADDED : நவ 06, 2026 09:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 09:32 PM ADDED : நவ 06, 2026 09:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் ஐயங்கார்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனம் திருமணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டரின் பேரில் இனிப்பு மற்றும் கார வகைகளைத் தயாரித்து வழங்கி வருகிறது.

காரைக்கால் பாரதியார் சாலையில் இயங்கி வரும் காரைக்கால் ஐயங்கார்ஸ் ஸ்வீட் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புது வகையான இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

நிறுவனத்தின் உரிமையாளர் ராகேஷ் கூறுகையில், காரைக்கால் ஐயங்கார்ஸ் ஸ்வீட்சில் தரமான பலகாரங்களை தயாரித்து மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறோம்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆர்டரின் பேரில் பலகாரங்கள் தயாரித்து தருகிறோம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மில்க் ஸ்வீட்ஸ், பிஸ்தா ரோல், பாதாம் லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளும், பாதாம், முந்திரி மற்றும் உலர் பழங்கள் சேர்த்து துருக்கி நாட்டு சுவையில் தயாரிக்கப்படும் பிரத்யேக இனிப்பு வகைகளும் விற்பனைக்குத் தயாராக உள்ளன. தேன்குழல், முறுக்கு, அதிரசம், ரவா உருண்டை, சீடை, கைமுறுக்கு, எள்ளூ முருக்கு உள்ளிட்ட பாரம்பரிய பலகாரங்களும், கார வகைகளும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப உடனுக்குடன் தயாரித்து வழங்கப்படுகின்றன.

தீபாவளியை முன்னிட்டு வழங்கப்படும் ரூ.600 மதிப்புள்ள மகிழ்ச்சி காம்போ மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. காரைக்கால், தமிழகம் உள்ளிட்ட 21 இடங்களில் காரைக்கால் ஐயங்கார்ஸ் நிறுவனம் மக்கள் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது’என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us