தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எஸ்.பி.,யை பிடிக்க முடியாமல் காரைக்கால் போலீசார் திணறல்

எஸ்.பி.,யை பிடிக்க முடியாமல் காரைக்கால் போலீசார் திணறல்

எஸ்.பி.,யை பிடிக்க முடியாமல் காரைக்கால் போலீசார் திணறல்


UPDATED : அக் 21, 2026 08:58 PM

ADDED : அக் 21, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 08:58 PM ADDED : அக் 21, 2026 08:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் பெண் காவலர் பாலியல் புகாரில் 7 பிரிவுகளில் கீழ் எஸ்.பி., மீது வழக்கு பதிந்தும் இதுவரையில் கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

காரைக்காலில், சுப்ரமணியன் எஸ்.பி., யாக பணியாற்றியபோது, 28 வயது பெண் போலீசுடன் பழக்கம் ஏற்பட்டது. சுப்ரமணியன் புதுச்சேரிக்கு மாற்றலாகி வந்தபின்னரும், பெண் போலீசிடம், வீடியோ அழைப்புகளில் பேசி வந்துள்ளார். இது பெண் போலீசின் கணவருக்கு தெரியவந்து, சீனியர் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, விசாரணைக்குழு அமைப்பட்டு, சுப்ரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் நகர போலீசார் கடந்த செப்.29ம் தேதி எஸ்.பி.,சுப்ரமணியன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். ஆனால், வழக்கு பதிவு செய்யப்பட்டு, 26 நாட்களாகிய நிலையில் இதுவரையில் சுப்ரமணியனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

மேலும் அவர் முன்ஜாமின் பெற நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எஸ்.பி.,பாலியல் வழக்கில் பல போலீசார் அவருக்கு உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. கடுமையான பாலியல் வழக்கில் சிக்கி உள்ள எஸ்.பி.,யை போலீஸ் பிடிக்குமா, இல்லையா என, கேள்வி எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us