/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டி - 20 கிரிக்கெட் இறுதி போட்டிக்கு காரைக்கால், புதுச்சேரி அணிகள் தகுதி
/
டி - 20 கிரிக்கெட் இறுதி போட்டிக்கு காரைக்கால், புதுச்சேரி அணிகள் தகுதி
டி - 20 கிரிக்கெட் இறுதி போட்டிக்கு காரைக்கால், புதுச்சேரி அணிகள் தகுதி
டி - 20 கிரிக்கெட் இறுதி போட்டிக்கு காரைக்கால், புதுச்சேரி அணிகள் தகுதி
ADDED : ஜன 18, 2024 04:09 AM

புதுச்சேரி: மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் அரை இறுதி போட்டியில், காரைக்கால், புதுச்சேரி மேற்கு அணிகள் வெற்றி பெற்று, இன்று இறுதி போட்டியில்பலப்பரீட்சை நடத்த உள்ளன.
கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம். நிறுவனம் இணைந்து புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது.
16 ம் தேதி நடந்த லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில், காரைக்கால், புதுச்சேரி வடக்கு, மேற்கு, தெற்கு அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.நேற்று மதியம் 3:00 மணிக்கு தொடங்கிய முதல் அரை இறுதி போட்டியில் காரைக்கால் மற்றும் புதுச்சேரி வடக்கு அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த வடக்கு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 138 ரன்கள் எடுத்தது.அந்த அணியின் அரவிந்த் 43 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். காரைக்கால் அணியின் ஹரி பிரசாத், தமிழழகன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின், ஆடிய காரைக்கால் அணி 19.5 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 139 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியது. 3 விக்கெட் மற்றும் 26 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்த தமிழழகன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இரவு 7:00 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரை இறுதி போட்டியில் புதுச்சேரி மேற்கு மற்றும் புதுச்சேரி தெற்கு அணிகள் மோதின.
முதலில் ஆடிய புதுச்சேரி தெற்கு அணி 19.5 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி மேற்கு அணியின் பிரபாகரன் கோபாலகிருஷ்ணன் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை சாய்த்தார்.
90 ரன்கள் வெற்றி இலக்குடன் மேற்கு அணி களம் இறங்கியது. மேற்கு அணி 11.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 94 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் லோகேஷ் 29 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் எடுத்த பிரபாகரன் கோபாலகிருஷ்ணன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இன்று மாலை 5:30 மணிக்கு நடக்கும்இறுதி போட்டியில் காரைக்கால் மற்றும் புதுச்சேரி மேற்கு அணிகள் மோதுகின்றன.