/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில யோகாசன போட்டி காரைக்கால் மாணவி சாம்பியன்
/
மாநில யோகாசன போட்டி காரைக்கால் மாணவி சாம்பியன்
ADDED : ஜூலை 30, 2025 11:37 PM

புதுச்சேரி: உலக ஆன்மிக யோகா அகாடமி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி உப்பளம், பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
போட்டியை அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் துவக்கி வைத்தார். 700 யோகாசன மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, 8 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது.
அதில் வெற்றி பெற்றவர்களுக்கு, அமைச்சர் லட்சுமி நாராயணன் பரிசுகள் வழங்கினார். பெண்கள் பிரிவில் காரைக்காலை சேர்ந்த மரியா கிளாரி அனுஷா, ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த அரவிந்தன் ஆகியோர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, பாஸ்கர், பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் மூர்த்தி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
யோகி ருத்திர கணபதி நன்றி கூறினார்.

