/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிய இறகு பந்து போட்டிக்கு காரைக்கால் மாணவி தேர்வு
/
ஆசிய இறகு பந்து போட்டிக்கு காரைக்கால் மாணவி தேர்வு
ஆசிய இறகு பந்து போட்டிக்கு காரைக்கால் மாணவி தேர்வு
ஆசிய இறகு பந்து போட்டிக்கு காரைக்கால் மாணவி தேர்வு
ADDED : அக் 01, 2025 11:22 PM

காரைக்கால்: சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய இறகு பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு, காரைக்கால் மாணவி தேர்வாகி உள்ளார்.
காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ்., நேஷனல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி ஜனனிகா, 16: இவர், கோவை மற்றும் ஆந்திராவில் நடைபெற்ற தென்னிந்திய இறகு பந்து போட்டியில் முறையே 2 மற்றும் மூன்றாம் பரிசுகளை வென்றார். மேலும், தென்மண்டல மற்றும் அனைத்திந்திய அளவில் ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் வெற்றி றெப்றார்.
அதனைத் தொடர்ந்து சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான இறகு பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு மாணவி ஜனனிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவி ஜனனிகா நாஜிம் எம்.எல்.எல்.,தலைமையில் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியை சந்திந்து, தென்னிந்திய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற பரிசுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் அகாடமி பயிற்சியாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.