/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் கோவில் நில மோசடி வழக்கு மாஜி சப் கலெக்டரிடம் எஸ்.பி., விசாரணை
/
காரைக்கால் கோவில் நில மோசடி வழக்கு மாஜி சப் கலெக்டரிடம் எஸ்.பி., விசாரணை
காரைக்கால் கோவில் நில மோசடி வழக்கு மாஜி சப் கலெக்டரிடம் எஸ்.பி., விசாரணை
காரைக்கால் கோவில் நில மோசடி வழக்கு மாஜி சப் கலெக்டரிடம் எஸ்.பி., விசாரணை
ADDED : டிச 09, 2024 06:26 AM
காரைக்கால்: கோவில் நிலம் மோசடி வழக்கில் மாஜி சப் கலெக்டர் மற்றும் மாஜி நில அளவையாளர் ஆகியோரிடம் சீனியர் எஸ்.பி., விசாரணை நடத்தினார்.
காரைக்காலில் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில் நிலம் உள்ளது. இக்கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் 186 மனைப்பட்டா தயார் செய்து, அதில், 70 மனைகளை தலா 10 லட்சத்திற்கும், மீதி மனைகளை தலா 3 லட்சம் வீதம் முன்பணம் பெற்றனர்.
இது குறித்த புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து, இடைத்தரகர்கள் சிவராமன், திருமலை, போலி லேஅவுட் தயார் செய்த மாஜி நகராட்சி நில அளவையாளர் ரேணுகாதேவி, ஆவணம் தயார் செய்த டாக்கு மென்ட் ரைட்டர் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் மாஜி சப் கலெக்டர் ஜான்சன் தலைமையில் கூட்டு சதி நடந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்த கடந்த அக் 11ம் தேதி மாஜி சப்கலெக்டர் ஜான்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஜான்சன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் இவ்வழக்கில் என்.ஆர்.காங்., பிரமுகர் ஆனந்த், ரேணுகாதேவியின் கணவர் குரு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் உடல்நிலை காரணமாக மாஜி சப் கலெக்டர் ஜான்சன் மற்றும் நில அளவையாளர் ரேணுகாதேவி ஆகியோருக்கு நீதிமன்றத்தில் ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாஜி சப்கலெக்டர் ஜான்சன் மற்றும் ரேணுகாதேவி ஆகியோரிடம் நகர காவல் நிலையத்தில் சீனியர் எஸ்.பி.,லட்சுமி சவுஜன்யா தலைமையில் போலீசார் தனித் தனியாக விசாரித்தனர்.
அதில் போலி ஆவணம் மூலம் கோவில் நிலம் மோசடி நடந்தது தெரியவந்தது. விசாரணையின்போது எஸ்.பி.,சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் புருமேஷத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர்.