/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் மீனவர்களை விடுவிக்க கவர்னரிடம் வலியுறுத்தல்
/
காரைக்கால் மீனவர்களை விடுவிக்க கவர்னரிடம் வலியுறுத்தல்
காரைக்கால் மீனவர்களை விடுவிக்க கவர்னரிடம் வலியுறுத்தல்
காரைக்கால் மீனவர்களை விடுவிக்க கவர்னரிடம் வலியுறுத்தல்
ADDED : பிப் 08, 2025 06:12 AM

புதுச்சேரி: இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, அவர்களது குடும்பத்தினர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து முறையிட்டனர்.
காரைக்காலில் மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை கடந்த மாதம் 8ம் தேதி இலங்கை ராணுவத்தினர் கைது செய்தனர். இதில் 9 மீனவர்களை விடுவிப்பதாக இலங்கை கோர்ட் அறிவித்துள்ளது.
காரைக்கால் கீழ்காசாக்குடியை சேர்ந்த அன்பழகன் 42, என்பவருக்கு மட்டும் 6 மாத சிறை, ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
தொடர்ந்து சமீபத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி காரைக்காலை சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்தது.
இதில் 3 மீனவர்கள் காயமடைந்தனர். அவர்களின் படகும், வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநில அனைத்து மீனவ அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, செயலாளர் கனகசபை மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,வுடன் சென்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்தனர்.
அப்போது, காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நட வடிக்கை வேண்டும் என்றனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.