ADDED : பிப் 17, 2025 05:57 AM

புதுச்சேரி; 45வது புதுச்சேரி மாநில கோஜீகாய் கராத்தே போட்டி பரிசளிப்பு விழாசெயின்ட் பேட்ரிக் பள்ளியில் நடந்தது.
கராத்தே போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
டாக்டர் நல்லாம் தலைமை தாங்கினார். ஜெயராம் ஓட்டல் இணை இயக்குனர் தன்யா ராமச்சந்திரன் வரவேற்றார். டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ரத்தின ஜனார்த்தனன், சிவாலயா பிரின்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சிவப்பிரகாசம், பள்ளி முதல்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கியோழி கெபிராஜ், ஹேமா பாண்டுரங்கன், சண்முகவேல், ஜிப்மர் ஊழியர் சங்க தலைவர் தமிழவாணன், கண் பரிசோதகர் மதன்குமார், பொறியாளர் பாலசுப்ரமணியன், அரசு சட்ட ஆலோசகர் தன்ராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
மூத்த கராத்தே நிபுணர் ஜோதிமணி மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கினார்.
சங்க செயலாளர் சுந்தர்ராஜன், ஆசிய நடுவர் அழகப்பன், சென்சாய்கள் குமரன், கண்ணன், ஜவகர், சுனிதா பிரியதர்ஷினி, கெஜலட்சுமி, வெங்கடாஜலபதி, முத்துக்குமார், சண்முகப்பிரியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை முன்னாள் உடற்கல்வி விரிவுரையாளர் சித்ரா ஜோதிமணி செய்திருந்தார்.
ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.

