/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதகடிப்பட்டில் கார்த்திகை தீப விழா
/
மதகடிப்பட்டில் கார்த்திகை தீப விழா
ADDED : டிச 04, 2025 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மதகடிப்பட்டு பகுதியில் அமைந்துள்ள குண்டாங்குழி மகாதேவர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப பெருவிழா நடைபெறும்.
அதன்படி தீப திருவிழாவான நேற்று மாலை 6:00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி, காலை 10:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, தொடர்ந்து பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலை 6:00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டு, உற்சவமூர்த்திக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

