/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா; தமிழ் சங்கத்தில் நுால் வெளியீட்டு
/
கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா; தமிழ் சங்கத்தில் நுால் வெளியீட்டு
கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா; தமிழ் சங்கத்தில் நுால் வெளியீட்டு
கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா; தமிழ் சங்கத்தில் நுால் வெளியீட்டு
ADDED : செப் 24, 2024 06:35 AM

புதுச்சேரி : புதுச்சேரி தி.மு.க., இளைஞர் அணி சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி இரு நுால் வெளியீட்டு விழா தமிழ் சங்கத்தில் நேற்று நடந்தது.
தி.மு.க., இலக்கிய அணி தலைவர் ராஜா வரவேற்றார். எதிர்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கினார். அவை தலைவர் எஸ்.பி., சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
இலக்கிய அணி மாநில அமைப்பாளர் சீனுமோகன்தாசு நோக்கவுரையாற்றினார். விழாவில் உலக தமிழாராய்ச்சி நிறுவன உதவி பேராசிரியர் சுலோசனா எழுதிய திரைவானில் கலைஞர், சென்னை பச்சையப்பன் கல்லுாரி தமிழ் துறை தலைவர் ஆண்டவர் எழுதிய பன்முகநோக்கின் கலைஞரின் படைப்பிலக்கியங்கள் என்ற நுால்கள் வெளியிடப்பட்டது.
எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டார்.இரு நுால்களை தமிழக தி.மு.க., தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி, புதுச்சேரி தி.மு.க., தலைமை செயற் குழு உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் நுால்களை திறனாய்வு செய்தனர்.
நுாலாசிரியர்கள் சுலோசனா, ஆண்டவர் ஏற்புரையாற்றினர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத்,தலைமை செயற்குழு உறுப்பினர் சி.பி., திருநாவுக்கரசு, தலைமை பொது குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்தியேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை தலைவர் பாண்டியன் நன்றி கூறினார்.