sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கருவடிக்குப்பம் குளம் பராமரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 கருவடிக்குப்பம் குளம் பராமரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 கருவடிக்குப்பம் குளம் பராமரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : பிப் 14, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:32 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குளத்தை துாய்மையாக பராமரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

உழவர்கரை நகராட்சி, கருவடிகுப்பம் லாஸ்பேட்டை சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் குளத்தினை அம்ருத் திட்டம் மற்றும் நகராட்சி நிதியின் மூலம் ரூ. 1.10 கோடி செலவில் துார்வாரி, மறுசீரமைப்பு செய்து, குளத்தைச் சுற்றி நடை பாதைகள், கைப்பிடிகள் மற்றும் அமர்வதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

குளத்தினை துாய்மையாக பராமரிப்பது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 11ம் தேதி நடந்தது.

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தலைமை தாங்கினார். இதில் பண்டிட் துரைசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரி முதல்வர், மாணவர்கள், நகராட்சிக்குட்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், அனைவரும் குளத்தினைச் சுற்றி நின்று துணிப்பைகளை ஏந்தி, ஒரு முறை பயன்படும் நெகிழிப் பொருட்களை தவிர்ப்பது, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தரம்பிரித்து அகற்றுவது, சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்திருப்பது மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us