கதிர்வேலன் பிளாஸ்டிக் உரிமையாளர் இல்ல திருமண விழா
கதிர்வேலன் பிளாஸ்டிக் உரிமையாளர் இல்ல திருமண விழா
ADDED : ஏப் 05, 2026 06:44 AM

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் கதிர்வேலன் பிளாஸ்டிக் உரிமையாளர் அருள்செல்வம் - ராஜலட்சுமி இல்ல திருமண விழா பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
திருமண விழாவில், மணமக்கள் செல்வலட்சுமி - ஜெயந்த் ஆகியோரை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், இளங்கோ எம்.எல்.ஏ., புதுவை தமிழ் சங்கத் தலைவர் முத்து, தமிழ்சங்க நிர்வாகிகள், பிளாஸ்டிக் தொழிற்சாலை உரிமையாளர்கள் பாபு, சுதாகரன், சங்கர், சேதுமன்னன், தனுஷ்சேத்தியா, அசோகன், சித்தானந்தம், சம்பத், அரிபிரசாந்த் மற்றும் மருந்து உற்பத்தி சங்க செயலாளர் சீனுவாசன், பொருளாளர் தண்டபாணி, சிறுகுறு தொழில் முனைவோர் சங்க நிர்வாகிகள், முன்னாள் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ரமேஷ், தொழிற்சாலை ஆய்வாளர்கள் ஞானவேல், முரளி மற்றும் அரசு உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
