/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு தொற்று நோயை தடுக்கலாம்'
/
'கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு தொற்று நோயை தடுக்கலாம்'
'கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு தொற்று நோயை தடுக்கலாம்'
'கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு தொற்று நோயை தடுக்கலாம்'
ADDED : நவ 17, 2025 02:50 AM

புதுச்சேரி: தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரத்தையொட்டி, தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஜிப்மர் ஏற்பாடு செய்துள்ளது.
ஜிப்மரில் தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரம் கடந்த 15ம் தேதி முதல் 21 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஜிப்மரில் தாய்பால் மையத்தில் குழந்தைகள் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஜிப்மர் நிர்வாக செய்திக்குறிப்பு:
அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்தது முதல் இரண்டு வயது வரை கண்டிப்பாக தாய்ப்பால் புகட்டவேண்டும். தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான உயரிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் முறையான அளவில் இருக்கிறது. தாய்ப்பால் குழந்தைகளிடையே வயிற்றுபோக்கு நிமோனியா மற்றும் செவிவழி நோய் தொற்றுகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
தாய்ப்பால் குழந்தைகளுக்கு சிறந்த அறிவாற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும். பசும்பால் கிரேப் வாட்டர், செயற்கை பால் பொருட்கள் மற்றும் பாட்டில் பால் ஆகியவை பச்சிளம் குழந்தைகளுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கும். தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஆகியவை உண்டாவதை பெருமளவில் தடுக்க முடியும்.
கங்காரு குழந்தை பராமரிப்பு முறை பச்சிளம் குழந்தைகளின் உயிர் பாதுகாப்பை அதிகரிப்பதுடன் அவர்களின் நரம்பு மண்டல வளர்ச்சி மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கும் வெகுவாக உதவுகிறது.
தாய்மார்கள் கண்டிப்பாக தங்களது கைகளை முறையாக சுத்தம் செய்து பச்சிளம் குழந்தைகளை பராமரிப்பதன் மூலம் குழந்தைகளுக்கான நோய் தொற்றுகளை வெகுவாக தடுக்க முடியும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

