/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் கீழடி புகைப்பட கண்காட்சி
/
பாகூரில் கீழடி புகைப்பட கண்காட்சி
ADDED : ஆக 12, 2025 02:51 AM
பாகூர்: முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பாகூர் கொம்யூன் குழு சார்பில், 'கீழடி நமது தாய்மடி' என்ற தலைப்பில், புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
பாகூர் சிவன் கோவில் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் கொம்யூன் ஒருங்கிணைப்பாளர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். சண்முகம் வரவேற்றார். கல்கி முன்னிலை வகித்தார். முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க, மாநில தலைவர் உமா, கீழடி நமது தாய்மடி என்ற புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.
இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். முன்னாள் அமைச்சர் கந்தசாமி கண்காட்சியை பார்வையிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் களப்பிரான் சிறப்புரையாற்றினார்.ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஜெகதீசன், கொம்யூன் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பெருமாள், செந்தமிழ்செல்வன், வேலாயுதம், கலைச்செல்வன், பக்கிரி, ஹரிராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆனந்தராமன் நன்றி கூறினார்.