/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.5.10 கோடி மோசடி வழக்கில் கேரளாவை சேர்ந்தவர் கைது
/
ரூ.5.10 கோடி மோசடி வழக்கில் கேரளாவை சேர்ந்தவர் கைது
ரூ.5.10 கோடி மோசடி வழக்கில் கேரளாவை சேர்ந்தவர் கைது
ரூ.5.10 கோடி மோசடி வழக்கில் கேரளாவை சேர்ந்தவர் கைது
ADDED : ஜூலை 26, 2025 08:08 AM

புதுச்சேரி : தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.5.10 கோடி மோசடி செய்த வழக்கில், மேலும் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவன மேலாளர் சுகியா என்பவருக்கு, கடந்த மார்ச் 25ம் தேதி, அவரது நிறுவன உரிமையாளர் போல மர்மநபர் வாட்ஸ் ஆப் மூலம் குறுச்செய்தி அனுப்பி, குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.5.10 கோடி செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
அதை உண்மை என நம்பிய சுகியா அந்த வங்கி கணக்கிற்கு 5 தவணைகளாக ரூ.5.10 கோடியை அனுப்பியுள்ளார்.
அதன் பிறகு உரிமையாளரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, மர்ம நபர் மோசடியாக பணத்தை அனுப்பக்கூறியது தெரியவந்தது.
இதுகுறித்து சுகியா அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி நபர்களை தேடினர்.
அதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொபிகுல் ஆலம் முலா, 35; நசிபுல் இஸ்லாம், 34; கேரள மாநிலம் வட்டப்பாறை அஜித், 30; மலப்புரம் சஷீல் சகத், 23; நபீ, 18; சஜித், 33; கர்நாடகாவை சேர்ந்த ஓம்கார் நாத், 42; தெலுங்கானா ராகவேந்திரா, 44; ஆந்திராவை சேர்ந்த சசிதர் நாயக், 26; பவாஜன், 36; கோயம்புத்துார் ரவிகிருஷ்ண ராவ், 50; திருச்சி குமரேசன், 26; ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 கோடியே 48 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர்.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய கேரளா, மலப்புரத்தை சேர்ந்த சீனு 45; என்பவரை சைபர் கிரைம் தனிப்படையினர் நேற்று முன்தினம் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த வழக்கில் சில வெளிநாட்டு நபர்களின் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால், அந்த நபர்களையும் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார்.