கேரள சுவர் ஓவியங்கள் லோக் நிவாசிற்கு அர்ப்பணிப்பு
கேரள சுவர் ஓவியங்கள் லோக் நிவாசிற்கு அர்ப்பணிப்பு
ADDED : செப் 04, 2026 11:23 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கேரள சுவர் ஓவியங்களை மக்கள் இல்லத்திற்கு (லோக் நிவாஸ்) அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு, எம்.எல்.ஏ., அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் ஓவியக் குழுவின் தலைவர் சுலோச்சனா ஓவியங்களை அர்ப்பணித்தார். காவல்துறை தலைமை இயக்குனர் ஷாலினி சிங் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் பேசுகையில், ‘சுவர் ஓவியங்களை வரைய ஓவியர் குழு எடுத்துக்கொண்ட முயற்சியும், சிரத்தையும் பாராட்டுக்குறியது. இந்த ஓவியம் புதுச்சேரியின் நான்கு மண்டலங்களின் பண்பாட்டுக் கூறுகளையும் பிரதிபலிக்கிறது’ என்றார்.
ஓவியங்களை சுலோச்சனா தலைமையிலான ஓவியக் குழுவினர் விலை இல்லாமல் மக்கள் இல்லத்திற்கு பரிசளித்துள்ளனர்.
