/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் மானபங்கம் கேரள வாலிபர் கைது
/
பெண் மானபங்கம் கேரள வாலிபர் கைது
ADDED : ஜன 03, 2026 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெண்ணை மானபங்கம் படுத்திய கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த 46 வயது பெண், கடந்த 31ம் தேதி இரவு 8:00 மணிக்கு தவளக்குப்பத்தில் இருந்து வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் குடிபோதையில், வழிமறித்து அப்பெண்ணை தாக்கி, ஆடையை கிழித்து, அவரை மானபங்கம் செய்தார். அவரை, அருகில் இருந்தவர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கேரள மாநிலம், வயநாடு பகுதியை சேர்ந்த நாவாஸ் மகன் ஷாதில் அலி, 21; என்பவரை கைது செய்தனர்.

