/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ.,வில் முக்கிய நிர்வாகிகள் நீக்கம்
/
பா.ஜ.,வில் முக்கிய நிர்வாகிகள் நீக்கம்
ADDED : ஏப் 01, 2026 04:50 AM

புதுச்சேரி: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக, முன்னாள் அமைச்சர் சாய் சரவணன்குமார் உட்பட 5 முக்கிய நிர்வாகிகளை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பா.ஜ., கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட காரணத்தால் முன்னாள் அமைச்சர் சாய் சரவணன்குமார், மாநில துணைத் தலைவர் சரவணன், மாநில செயலாளர் ராமு, அமைப்பு சாரா பிரிவு அமைப்பாளர் பிரகாஸ், மருத்துவ பிரிவு துணை அமைப்பாளர் விக்னேஸ்வரன் ஆகியோர் இன்று (நேற்று) முதல் (31ம் தேதி) இருந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகின்றனர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

