தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தங்களுக்கு எதிராக 'டம்மி' வேட்பாளர்கள் எதிரணியுடன் சமரசம் பேசும் முக்கிய புள்ளிகள்

 தங்களுக்கு எதிராக 'டம்மி' வேட்பாளர்கள் எதிரணியுடன் சமரசம் பேசும் முக்கிய புள்ளிகள்

 தங்களுக்கு எதிராக 'டம்மி' வேட்பாளர்கள் எதிரணியுடன் சமரசம் பேசும் முக்கிய புள்ளிகள்


ADDED : பிப் 15, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தனக்கு எதிராக 'டம்மி' வேட்பாளரை நிறுத்த கோரி எதிரணியுடன் முக்கிய புள்ளிகள் சிலர் சமரசம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் சட்டசபை தேர்தலுக்காக சுயேச்சைகள் துவங்கி அனைத்து கட்சிகளுமே தீவிரமாக களப்பணியை துவங்கி விட்டனர். இதில், கடந்த தேர்தலில் பிரதான கட்சிகளுடன் போட்டியிட்டு தோல்வியை தழுவிய முக்கிய புள்ளிகள் சிலரும், தற்போது அதிகாரத்தில் உள்ள மாண்புமிகுகள் சிலரும் தங்களின் எதிரணியில் உள்ள முக்கிய தலைவர்களை சந்தித்து, வரும் தேர்தலில் தங்களுக்கு எதிராக வெற்றி பெறக் கூடியவர்களை தவிர்த்து விட்டு, 'டம்மி' வேட்பாளர்களை நிறுத்தி, உதவி செய்ய வேண்டும் என, கெஞ்சாத குறையாக பேசி உள்ளனர்.

கடந்த சில நாட்களாக துாக்கமின்றி தவித்து வரும் முன்னாள் மாண்புமிகு ஒருவர் தனது உறவினருக்கு எதிர் அணியில் சீட்டு வழங்க வேண்டாம் என, முக்கியமானவரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். இதேபோல் கிராமப் பகுதியில் உள்ள இரண்டு முக்கிய புள்ளிகள் தங்களின் எதிரணியில் உள்ள தலைவரிடம், என்னுடைய வெற்றிக்கு பாதிப்பு ஏற்படாமல் நீங்களே தொகுதியை வாங்கி நிற்க வேண்டும்.

இதற்கு கைமாறாக உங்கள் தொகுதியில் வளமானவரை நிறுத்தாமல் ஒரு டம்மியை நிறுத்துவதற்கு உதவுவேன் என்று கூறி, இருவருக்குள் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியே கசிந்து வருகிறது. தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் தங்களுக்கு எதிராக டம்மி வேட்பாளர்களை நிறுத்துவதற்கு எதிரணியுடன் சமரச முயற்சியில் முக்கிய புள்ளிகள் ஈடுபட்டு வருவது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us