ADDED : செப் 19, 2026 02:17 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், பட்டப்பகலில் ரவுடி ஆனந்த், 33, வெட்டி கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி, பாக்கமுடையான்பட்டு ஆனந்த் மீது, கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன், ஜாமினில் வந்தார். நேற்று, அவரது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார். மதியம், இ.சி.ஆரில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை செய்யும் மனைவியிடம், ஸ்கூட்டரை வாங்கிக் கொண்டு, சிவாஜி சிலை அருகில் உள்ள வழக்கறிஞரை பார்க்க போவதாக கூறிச்சென்றார்.
இ.சி.ஆர்., தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது, நான்கு பைக்குகளில் வந்த எட்டு பேர் கும்பல், ஆனந்த் ஸ்கூட்டர் மீது மோதியது. கீழே விழுந்த அவரை சுற்றிவளைத்து சராமரியாக வெட்டி கொன்றது. லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கடந்தாண்டு நடந்த கொலைக்கு, பழிக்குப்பழியாக அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.
