தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை

அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை

அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை


ADDED : டிச 22, 2024 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2024 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திரா காந்தி அரசு மருத் துவமனையில், சிறுநீரக தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

புதுச்சேரி இந்திரகா காந்தி அரசு மருத்துவமனைக்கு 38 வயது பெண் ஒருவர், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். அவரை பரிசோதனை செய்ததில், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, மருத்துவர்கள் கூறினர். பாதிக்கப்பட்டவரின் தாய், தனது சிறுநீரகத்தை தானம் செய்தார்.

அந்த பெண்ணுக்கு, சிறுநீரியல் துறைத் தலைவர் சுதாகர் தலைமையில், மருத்துவக் குழுவினர் லேப்ராஸ்கோபி கருவி மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சிறிய துளை மூலம் சிறுநீரகத்தை அகற்றி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.

இதுகுறித்து, மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் கூறுகையில், 'சிறுநீரக தான அறுவை சிகிச்சை செய்த பின், வலி குறைவாக இருக்கும். குறுகிய காலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது, குறைந்தபட்ச காய தழும்பு இருக்கும். விரைவாக குணமடைந்து, நோயாளி வீட்டு செல்லலாம்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us