/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மது கடத்தலை தடுக்க 'கிடுக்கிப்பிடி' 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை 'ரெடி'

ADDED : மார் 21, 2024 07:47 AM

புதுச்சேரி : கலால் துறையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் இருந்து மதுபானம் மற்றும் சாராயம் கடத்துவதை தடுக்க கலால் துறை சார்பில், 10 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த சோதனை சாவடிகள் அனைத்தும் 24 மணி நேரமும் இயங்கும்.
சோதனை சாவடிகளில் 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கேமராக்கள் மூலமாக, கலால் துறை தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே அனைத்து பணிகளையும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன், கலால் துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்துசோதனை சாவடிகளை 'சிசி டிவி' மூலமாக கண்காணிப்பது சம்மந்தமாக ஆய்வு செய்தார். தாசில்தார்கள் உதயராஜ், ஜோதிமணி, பாலகிருஷ்ணன், கேஷியர் குமார் ஆகியோர் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை விளக்கி கூறினர்.