ADDED : பிப் 17, 2024 04:45 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி,: அரசு பள்ளிகளுக்கு இடையிலான மழலையர் கலை விழாவில் மாணவ மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
புதுச்சேரி அரசின் பள்ளி கல்வித் துறை வட்டம் ஐந்து சார்பில் வட்டம் அளவிலான மழலையர் கலை விழா தியாகி முத்துக்குமாரசாமி அரசு ஆண்கள் துவக்கப் பள்ளியில் நடந்தது. பள்ளி துணை ஆய்வாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல்,ஓவியம் வரைதல், பேச்சுப்போட்டி, வினாடி வினா, மாறுவேட போட்டி, நடனம், நாடகம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வட்டம் ஐந்தில் உள்ள 32 அரசு துவக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர்கள் சீனிவாசன், செல்வம், பாலமுருகன், செந்தில்குமார். தேன்மொழி, ஜெயசித்ரா மற்றும்பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
