ADDED : நவ 18, 2024 06:59 AM

திருக்கனுார்; வாதானுார், அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் மழலையர் வண்ண விழா நடந்தது.
ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவத் தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் அறிவழகன்,ஆளவந்தார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவையொட்டி, முன் மழலையர் வகுப்பறைகளில் ஓவியங்கள் வரையப்பட்டு, மாணவர்கள் பல வண்ண உடைகளில் பங்கேற்றனர். மாணவர்களிடையே பேச்சு, நடனம், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியை பார்வதி நன்றி கூறினார். ஆசிரியை ஓம்சாந்தி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரேணு, செந்தமிழ்ச்செல்வி, குமுதா, வேலவன், லஷ்மணன், ஜார்ஜஸ், பூவிழி, சங்கரி, மலர்க்கொடி, குப்புசாமி, மகேஸ்வரி, சுஜாதா,சிவசங்கரி, சுமதி, நிஷாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
