தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதி  ஆங்கில பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

 பாரதி  ஆங்கில பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

 பாரதி  ஆங்கில பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா


ADDED : ஏப் 17, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 06:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.

இப்பள்ளியில், எல்.கே.ஜி., முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் பொருட்டு, எம்.ஐ., கிட்ஸ் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் சிறந்த மாணவர்களுக்கு பெஸ்ட் ஸ்டூடன்ட் அவார்டு மற்றும் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி நிர்வாகி சம்பத் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை சுசிலா சம்பத் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் ஹரிஷ்குமார் முன்னிலை வகித்தார்.

எம்.ஐ., கிட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கார்த்திகா, தமிழ்நாடு மற்றும் புதுவை பொறுப்பாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு, மழலையர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

பள்ளியின் நிர்வாகி சம்பத் பேசுகையில் 'மாணவர்களின் இன்றைய எதிர்கால கல்வி தேவையை இன்றே உணர்ந்து அவர்களுக்கு பல்துறை கற்றலை கற்பித்து சிறந்த மாணவர்களாக உருவாக்குவதே எம் பள்ளியின் கடமையாக கொண்டு கல்வி சேவையை செய்து வருகிறோம்' என்றார்.

விழாவையொட்டி, மாணவர்களின் மொழித் திறன், மற்றும் தனித்திறன் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், திரளான பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாக இயக்குனர் மோகன்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us