தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி புதுச்சேரியில் புதிய கிளை திறப்பு

கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி புதுச்சேரியில் புதிய கிளை திறப்பு

கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி புதுச்சேரியில் புதிய கிளை திறப்பு


ADDED : மே 10, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2025 01:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில், கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமியின், புதிய கிளை நேற்று திறக்கப்பட்டது.

கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி, பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. இந்த கிளைகளை தொடர்ந்து, புதுச்சேரி வில்லியனுார் சாலை, மேரி உழவர்கரை, மோத்திலால் நகர், வாசவி மால், முதல் தளத்தில் புதிய கிளை நேற்று திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் நிறுவனரும், இயக்குனர் பூமிநாதன் தலைமை தாங்கி, வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, அரசு செயலர் முகமது மன்சூர், புதிய கிளையை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, புதியதாக ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்பிற்கு வந்த மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து சிறப்புரை நிகழ்த்தினார்.

விழாவில், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிறுவனர் கூறுகையில், 'சென்னை, டில்லி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இந்த கிளைகளை தொடர்ந்து, புதுச்சேரியில், நேரடி பயிற்சி வகுப்பு, புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-25ம் ஆண்டு வெளியான யு.பி.எஸ்.சி., தேர்வு முடிகளில், இந்திய அளவில், எங்கள் நிறுவனத்தில், பயிற்சி பெற்றவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அதில், 138 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 13ம் ஆண்டு, அடியெடுத்து வைத்துள்ள, கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி, கடலுார், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் பயனடையும் வகையில், புதுச்சேரியில் திறக்கப்பட்டுளளது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us