/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மன்னர்மன்னன் பிறந்த நாள் கலை இலக்கிய திங்கள் விழா
/
மன்னர்மன்னன் பிறந்த நாள் கலை இலக்கிய திங்கள் விழா
ADDED : நவ 04, 2024 05:49 AM

புதுச்சேரி : பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மன்னர்மன்னன் பிறந்த நாளையொட்டி கலை இலக்கிய திங்கள் விழா நடந்தது.
பாரதிதாசன் மகன் மன்னர்மன்னன் 97 வது பிறந்த நாளையொட்டி, 'புரட்சிக்கவிஞர் போற்றிய மைந்தர் மன்னர்மன்னன்' என்ற தலைப்பில் 72வது மாத விழா நேற்று நடந்தது.
அறக்கட்டளை தலைவர் கோ பாரதி தலைமை தாங்கினார். மன்னர்மன்னன் படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா, முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ரெவே சொசியால் சங்க தலைவர் துபாய் குழந்தை, திண்டிவனம் தாகூர் கல்விச்சங்க நிர்வாகி ரவீந்திரநாத், தேவேந்திரநாத், கொஜிரியோ கராத்தே சங்க தலைவர் சுந்தர்ராஜன், கலை பண்பாட்டு துறை இயக்குநர் கலியபெருமாள், தமிழ் அறிஞர்கள் வேல்முருகன், சடகோபன், சீனுவேணுகோபால், காங்கேயன், ராதே கோவிந்தராசு, சீனு மோகன்தாஸ் கலந்து கொண்டனர்.
'மறுமலர்ச்சி கவிஞர் மன்னர்மன்னனும் செவாலியே ராச வெங்கடேசனும்' என்ற தலைப்பில் முனைவர் பூங்குழலி பெருமாள் உரையாற்றினார். 50 மாணவ மாணவிகள், பாரதிதாசன் கவிதை வரிகளான, 'உண்டாகி இருக்கின்ற தமிழ் உணர்ச்சி' என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர். படைப்பாளி பைரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.