லட்சுமிநாராயணா மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
லட்சுமிநாராயணா மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
ADDED : டிச 13, 2025 05:12 AM
புதுச்சேரி: லட்சுமி நாராயணா மருத்துவமனையில் கீழ்வாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை எலும்பியல் துறை டாக்டர்கள் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த 69 வயது ஆண், ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ் எனப்படும் கீழ்வாதத்தால் தீவிர பாதிப்பு ஏற்பட்டு முழங்கால் வலியுடன் லட்சுமி நாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, எலும்பியல் மருத்துவத் துறை தலைவர் விஜயராகவன் வழிகாட்டுதலின்படி, டாக்டர்கள் அபிலாஷ், சபரிஷ் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். அவர் முழங்கால் வலியின்றி குணமடைந்தார்.
சாதனை புரிந்த மருத்துவக் குழுவினரை நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் எம்.பி., பாரத் கல்வி குழும தலைவர் சந்திப் ஆனந்த், மருத்துவக் கல்லுாரி டீன் ஜெயலட்சுமி மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் போஸ்கோ சந்திரகுமார் ஆகியோர் பாராட்டினர்.
இதுகுறித்து லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லுாரியின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பு கூறுகையில், 'மருத்துவமனையில் அனைத்து உயர் சிறப்பு அறுவை சிகிச்சைகள் மிகக் குறைந்த செலவிலும், தமிழ்நாடு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக அளிக்கப்படுகிறது' என்றார்.
