ADDED : அக் 28, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : சாலையில், கத்தியுடன் திரிந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை, இ.சி.ஆர்., சாலையில், தனியார் மதுபாரில் அருகில் ஒருவர் கத்தியுடன் நின்று அங்கு செல்லும் பொதுமக்களை மிரட்டி வருவதாக, லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப்இன்ஸ்பெக்டர் அன்சர்பாஷா மற்றும் போலீசார் அங்கு நின்ற அந்த நபரை பிடித்து விசாரனை நடத்தினர்.
அதில், ஜீவானந்தபுரத்தை சேர்ந்த ரகு, 30; இவர், கொலை மற்றும் அடிதடி வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வந்தது. தெரியவந்தது. அவர் வைத்திருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.