தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொம்மந்தான்மேடு படுகை அணை கரை பலப்படுத்தும் பணி தீவிரம்

கொம்மந்தான்மேடு படுகை அணை கரை பலப்படுத்தும் பணி தீவிரம்

கொம்மந்தான்மேடு படுகை அணை கரை பலப்படுத்தும் பணி தீவிரம்


ADDED : அக் 27, 2024 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2024 04:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொம்மந்தான்மேடு படுகை அணையின் கரையை, தற்காலிகமாக பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகூர் அடுத்துள்ள கொம்மந்தான்மேடு கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதுச்சேரி - தமிழக பகுதியை இணைக்கும் வகையில், கடந்த 2010-ம் ஆண்டு, தரைப்பாலத்துடன் கூடிய படுகை அணை கட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், தென்பெண்ணையாற்றில் தண்ணீர் செல்கிறது. இதனால், கொம்மந்தான்மேடு படுகை அணை நிரம்பி தரைப்பாலத்தின் மீது தண்ணீர் வழிந்து செல்கிறது.

ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தால், கரை பகுதியில் உடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பொதுப்பணித்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சவுக்கு கம்பங்கள் மற்றும் மண் மூட்டைகளை கொண்டு தாழ்வாக உள்ள கரை பகுதியை பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us