காங்., மீடியா மற்றும் பப்ளிசிட்டி கமிட்டி ஆலோசனை கூட்டம்
காங்., மீடியா மற்றும் பப்ளிசிட்டி கமிட்டி ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 03, 2026 04:17 AM

புதுச்சேரி: புதுச்சேரி காங்., அலுவலகத்தில் மீடியா மற்றும் பப்ளிசிட்டி கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சேர்மன் தேவதாஸ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் மாநில தலைவர் வைத்தியலிங்கம், அஞ்சலி நிம்மால்கர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைக்கள் வழங்கினர். துணை சேர்மன் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கமிட்டி உறுப்பினர்கள் ரத்னா, அசோக் குமார், பிரதீஷ் இருதயராஜ், சக்திவேல் பிரபு, உதயகுமார், சித்ராதேவி, ராஜா குமார், மனிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தை எவ்வாறு திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும். மக்களை நேரடியாகச் சென்றடையும் வகையில் எந்தவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். விளம்பரங்கள், எந்த ஊடகங்கள் மூலம் கருத்துகளை தெரிவித்தால், மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி ஓட்டாக மாற்றலம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் பிரசாரம் மற்றும் விளம்பர வியூகங்களை திறம்பட செயல்படுத்துவது, சமூக ஊடகங்கள், மக்கள் சந்திப்பு, பிரசாரப் பொருட்கள் தயாரிப்பு போன்ற அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அனைவரின் கருத்துகளையும் கேட்ட சேர்மன் தேவதாஸ் மற்றும் மாநில தலைவர் வைத்தியலிங்கம் அவற்றை ஆய்வு செய்து, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்தனர்.
