/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சப் ஜூனியர் ஹாக்கி போட்டி கூடப்பாக்கம் அணி வெற்றி
/
சப் ஜூனியர் ஹாக்கி போட்டி கூடப்பாக்கம் அணி வெற்றி
ADDED : பிப் 06, 2025 06:54 AM

வில்லியனுார்; திருவாரூரில் நடந்த சப் ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் சாதித்து வந்த புதுச்சேரி கூடப்பாக்கம் அணியினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவாரூரில் கடந்த வாரம் நடந்த சப் ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில், திருவாரூர், திருவண்ணாமலை, மதுரை, நாமக்கல், ராஜபாளையம், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி சார்பில் கூடப்பாக்கம் அணி, உள்ளிட்ட பல்வேறு 20க்கும் மேற்பட்ட ஹாக்கி அணிகள் விளையாடினர்.
அதில், கூடப்பாக்கம் ஆண்கள் ஹாக்கி அணி, பல்வேறு பிரிவுகளில் விளையாடி வெற்றி பெற்று, நிறைவாக ராஜபாளையம் அணியுடன் இறுதி போட்டியில் விளையாடியது.
அதில் 0-1 என்ற கோல் கணக்கில், ராஜபாளையம் அணி வெற்றி பெற்றது. புதுச்சேரி கூடப்பாக்கம் அணி இரண்டாமிடம் பிடித்தது.
இந்த அணி வீரர்களை, கோணேரிக்குப்பம் கோவில் அரங்காவலர் குழு தலைவர் தாமோதரன், கூடப்பாக்கம் ஹாக்கி அணி குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா, நிர்வாகிகள் ராம், பச்சையப்பன், சதீஷ் ,ராணி, கருணாகரன், அரவிந்த், பிரவின் உட்பட பலர் வாழ்த்தினர்.