/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
/
கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ADDED : மே 09, 2025 12:11 AM
வில்லியனுார்: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் ஆராதனை, சாகை வார்த்தல், ஊரணி பொங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
இரவு கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேர் திருவிழாகொடியேற்றத்துடன் துவங்கியது.
வரும் 13ம் தேதி மாலை திருநங்கைகள் அழகி போட்டி, கூத்தாண்டவர் சுவாமிக்கு திருக்கல்யாணம், பக்தர் களுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும் 14ம் தேதி காலை 9:30 மணியளவில் தேர் திருவிழா, மாலை 4:30 மணியளவில் அழுகள நிகழ்ச்சி, 29ம் தேதி படுகளம் எழுப்புதல் நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் பிள்ளையார்குப்பம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.