/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் ரங்கசாமியுடன் கொதுலுப் துணை மேயர் சந்திப்பு
/
முதல்வர் ரங்கசாமியுடன் கொதுலுப் துணை மேயர் சந்திப்பு
முதல்வர் ரங்கசாமியுடன் கொதுலுப் துணை மேயர் சந்திப்பு
முதல்வர் ரங்கசாமியுடன் கொதுலுப் துணை மேயர் சந்திப்பு
ADDED : செப் 25, 2024 04:10 AM

புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, பிரான்ஸ் நாட்டின் கொதுலுப் பகுதியின் துணைமேயர் ஒலிவியா சந்தித்தார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 'கொதுலுப்' பகுதியின் துணை மேயர் ஒலிவியா மற்றும் குளோபல் இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் மெகன் பொன்னுசாமி ஆகியோர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், திருமுருகன் ஆகியோரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், புதுச்சேரி மற்றும் கொதுலுப் பகுதிக்கு இடையே கலாச்சார உறவு மேம்படவும், தமிழ்ப்பண்பாட்டை புதுப்பிக்கவும், உடன்படிக்கை மேற்கொள்ளவும், முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
மேலும், வரும் டிசம்பரில் கொண்டாடப்பட உள்ள 'கொதுலுப்' பகுதியின், 170,வது ஆண்டு விழாவில் பங்கேற்கவும் முதல்வருக்கு அழைப்பு விடுத்தனர்.
இதில் பிரான்ஸ் முத்தமிழ் சங்கத்தை சேர்ந்த கோவிந்தசாமி ஜெயராமன், அப்துல் வாஹித் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆறுமுகம் பெருமாள் மேற்கொண்டார்.