/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணத்தை ஒப்படைத்த சிறுவர்களுக்கு பாராட்டு
/
பணத்தை ஒப்படைத்த சிறுவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 14, 2024 08:11 AM

புதுச்சேரி : சாலையில் கிடந்த பணத்தை நேர்மையாக ஸ்டேஷனில் ஒப்படைத்த சிறுவர்களை போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.
முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வீதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் தியானேஸ்வரன், 10; கவுரவ், 9. இருவரும் வீட்டின் எதிரே நேற்று மாலை விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது, சாலையில் கிடந்த 70 ரூபாயை கண்ட இருவரும், அதனை எடுத்து செலவு செய்யாமல், மாலை 5:00 மணியளவில் முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைந்தனர்.
இதையடுத்து, சீனியர் கிரேடு சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார், பணம் சிறிய அளவில் இருந்தாலும், அதனை நேர்மையாக ஸ்டேஷன் கொண்டு ஒப்படைத்தற்காக அச்சிறுவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டி ரூ.100 வெகுமதி அளித்தனர்.
ஆனால், பணத்தை சிறுவர்கள் வாங்க மறுத்ததால், அந்த பணத்தை சாக்லெட்டாக வாங்கி கொடுத்தனர். சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறுவர்களின் நேர்மையை பலரும் பாராட்டினர்.