/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குமளம் சிவகாமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
குமளம் சிவகாமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 05, 2025 04:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம்: பி.எஸ்.பாளையம் அடுத்த குமளம் சிவகாமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கும்பாபிஷேக விழா கடந்த 3ம் தேதி காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் தனபூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜை நடந்தது. காலை 9:30 மணிக்கு கலசம் புறப்பாடு, விமான கோபுர மகா கும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு சிவகாமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிேஷகத்தை பார்த்திபன் சுவாமிகள் நடத்தி வைத்தார். தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது.

