/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
/
அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED : டிச 02, 2025 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, சின்ன சுப்பராய பிள்ளை வீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு காலை சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பரிவார சுவாமிகளுக்கு கலச அபிஷேகமும், அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு 108 சங்கு மற்றும் கலசம் அபிஷேகம் நடந்தது.
மாலையில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கேோவில் நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

