/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொடுக்கூர் கோவில் கும்பாபிஷேகம்
/
கொடுக்கூர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 05, 2025 02:48 AM

திருக்கனுார்:திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான கொடுக்கூர் கனகவல்லி நாயிகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி துவக்கியது.
இதையொட்டி, அனுக்ஞை ஆசார்ய யஜமான ஸங்கல்பம், அங்குரார்பணம், வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி சாத்துமுறை நடந்தது.
நேற்று முன்தினம் புண்யாஹம், அக்னி பிரணயனம், ஹோமம் பூர்ணாஹூதி சாத்துமுறை, அஷ்டபந்தனம் சாத்துதல், பிம்ப வாஸ்து, மகாசாந்தி விசேஷ திருமஞ்சனம், , ரக்ஷாபந்தனம், சயனாதி வாஸம்,ஸர்வதேவார்ச்சனம் ஹோமம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக, நேற்று கடம் புறப்பாடாகி லட்சுமி நாராயண பெருமாள் பிரதானம், பரிவாரம், விமானத்திற்கு, அர்ச்சகர் உப்பிலி நாராயண பட்டாச்சாரியார் தலைமையில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதில், திரளான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.இரவு கனகவல்லி நாயிகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி திருகல்யாண உற்சவம் நடந்தது.