தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்துமாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

முத்துமாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

முத்துமாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்


ADDED : ஜூன் 07, 2025 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2025 02:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில், நாளை கும்பாபிேஷகம் நடக்கிறது.

முருங்கப்பாக்கம் நாட்டார் தெருவில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருப்பணிகள் முடிந்த நிலையில், நாளை 8ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது. அதையொட்டி, நேற்று முன்தினம், வேள்வி நிறைவு, பால கணபதி பூஜை நடந்தது. நேற்று தீபத்திருமகள் வழிபாடு, முதற்கால வேள்வி பூஜை நடந்தது.

இன்று இரண்டாம் கால வேள்வி, மற்றும் மூன்றாம் கால வேள்வி, சூரியபூஜை, ஞானத் திருமஞ்சனம் பூஜை, நவகன்னி நவசக்தி பூஜை வேள்வி நடக்கிறது.

நாளை 8ம் தேதி, நான்காம் கால வேள்வி பூஜை, காலை 8:00 மணியளவில், முத்துமாரியம்மன் கோவிலில் விமானத்தில், புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை, திருப்பணிக்குழு தலைவர் வாழ்முனி, கோவில் நிர்வாக அதிகாரி அமுதன், பஞ்சாயத்து தலைவர் ராமலிங்கம், முன்னாள் எம்.பி., ராமதாஸ், முன்னாள் சபாநாயகர் சபாபதி மற்றும் திருப்பணிக்குழுவினர் பாண்டுரங்கன், தேவராஜன், மாரிமுத்து, ராமமூர்த்தி, சந்திரசேகரன், பரத், யுவராஜன், ஜெயகாந்தன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us