தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ யோகவிநாயகர் கோவிலில் 10ம் தேதி கும்பாபிஷேகம்

யோகவிநாயகர் கோவிலில் 10ம் தேதி கும்பாபிஷேகம்

யோகவிநாயகர் கோவிலில் 10ம் தேதி கும்பாபிஷேகம்


ADDED : பிப் 07, 2025 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2025 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கம் வலம்புரி யோக விநாயகர் கோவிலில் 10ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

கரியமாணிக்கம் வெங்கடசுப்பா ரெட்டியார் நகரில், வலம்புரி யோக விநாயகர் கோவில், தட்சணாமூர்த்தி, துர்கையம்மன் சன்னதிகள் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா வரும் 10ம் தேதி காலை 10.00 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, நாளை காலை 10.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கி, தனபூஜை, மகாலட்சுமி ஹோமம், வாஸ்து ஹோமம், பிரவேசபலி நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு யாகசாலை பிரவேசமும், ரக்ஷாபந்தனம், முதல்கால பூஜையும் நடக்கிறது. 9ம் தேதி காலை 9.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, வேத பாராயணம், மாலை 5.00 மணிக்கு உற்சவமூர்த்தி சிறப்பு திருமஞ்சனம், மாலை 6.30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. 10ம் தேதி காலை 5.00 காலை கோ பூஜை, நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு, 10.15 மணிக்கு விநாயகர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us