/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுநகர் பாலமுருகன் கோவில் கும்பாபிேஷக விழா
/
புதுநகர் பாலமுருகன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : ஜன 20, 2025 06:28 AM

புதுச்சேரி: ஆலங்குப்பம் புதுநகர் பாலமுருகன் கோவில் மகா கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.
ஆலங்குப்பம், புது நகரில், பாலவிநாயகர், பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் புதிதாக 21 அடி உயர விஸ்வரூப பாலமுருகன் சிலை அமைக்கப்பட்டு, திருப்பணிகள் முடிவடைந்தது. இதன் தொடர்ச்சியாக மகா கும்பாபிேஷக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த 17ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. அன்று மகா கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. மாலை வாஸ்து சாந்தி, மூலமந்திர ஹோமம், முதற்கால யாக வேள்வி நடந்தது.
18 ம் தேதி இரண்டாம் கால வேள்வி, மாலை மூன்றாம் கால வேள்வி நடந்தது. நேற்று காலை நன்காம் கால யாகவேள்வி நடந்தது. தொடர்ந்து, பாலவிநாயகர், பாலமுருகன் மற்றும் 21 அடி உயர விஸ்வரூப பால முருகன் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான், வன்னியர் பேரியக்க தலைவர் செந்தில் உள்ளிட்ட பலர் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.