/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் வரும் 2ம் தேதி கும்பாபிேஷகம்
/
செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் வரும் 2ம் தேதி கும்பாபிேஷகம்
செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் வரும் 2ம் தேதி கும்பாபிேஷகம்
செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் வரும் 2ம் தேதி கும்பாபிேஷகம்
ADDED : ஜன 28, 2025 06:18 AM
புதுச்சேரி: குருவப்ப நாயக்கன்பாளையம் (ஜி.என்.பாளையம்), செல்வமுத்து மாரியம்மன், அய்யனார், பிடாரியம்மன் கோவில் கும்பாபிேஷக வரும் 2ம் தேதி நடக்கிறது.
விழா வரும் 31ம் தேதி காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், தனபூஜை, மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து கோ பூஜை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து பூஜை, யாகசாலை பூஜை, வேதிகா அர்ச்சனை, மூலமந்திர ஹோமம் நடக்கிறது.பிப். 1ம் தேதி காலை 8:30 மணிக்கு வழக்கமான பூஜைகளும், 11:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம், நான்கு வேத பாராயணம், தமிழ்முறை ஆசீர்வாதம் நடக்கிறது.
மாலையில் விக்னேஷ்வர பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, யாகசாலை பூஜை, 108 மூலிகை ஹோமம் நடக்கிறது. பிப். 2ம் தேதி காலை 6:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, தீபாராதனை நடக்கிறது. காலை 9:45 மணிக்கு கலச புறப்பாடும், 10:05 மணிக்கு கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது.
இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு தீபாரதனை, மின் அலங்காரத்துடன் சவாமி வீதி உலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.