/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆற்காடு ஐயனாரப்பன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
ஆற்காடு ஐயனாரப்பன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : டிச 14, 2024 03:41 AM

திருபுவனை: மதகடிப்பட்டு புதுநகரில் உள்ள ஆற்காடு ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (15ம் தேதி ) நடக்கிறது.
திருபுவனை அடுத்த மதகடிப்பட்டு புதுநகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்காடு ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2003ம் ஆண்டு செப். 10ம் தேதி நடைபெற்றது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு தற்போது மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
விழாவையொட்டி, இன்று காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. மதியம் 1:00 மணிக்கு யாக கால பூஜை ,கலா தாபனம், இரவு அஷ்டபந்தனம் மருந்துசாத்துதல், நடக்கிறது.
நாளை (15ம் தேதி) காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜையும், காலை 9:00 மணிக்கு யாத்ராதானமும், காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10:15 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும், 11:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி, விழா குழுவினர் மற்றும் கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.