
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அருகே தண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவில், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தவளக்குப்பம் அடுத்த ரங்கா ரெட்டிபாளையத்தில், தண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 27ம் தேதி, கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, நவகிர ஹோமம், கோ பூஜை, முதல்கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம், இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை, யாத்ராதானத்தை அடுத்து, பாலமுருகன் கோவில் மற்றும் குளக்கரையில் அமைந்துள்ள சப்த கன்னி சுவாமிகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, தண்டு மாரியம்மன் கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.