ADDED : நவ 21, 2024 05:45 AM
அ நிறம் | அளவு
பாகூர்: பாகூர் அடுத்த கடுவனுார் கிராமத்தில் ஏழை முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 18ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நான்கு கால யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று கும்பாபிேஷக விழா நடந்தது.
இதனையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு ரக்ஷபந்தனம், நாடி சந்தனம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
