ADDED : செப் 15, 2026 05:43 PM
அரியாங்குப்பம்: இடையார்பாளையம் பிரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது.
தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் – நாணமேடு பகுதியில், பிரசித்தி விநாயகர் கோவில், எல்லையம்மன், கங்கையம்மன், ஜலகண்டேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி, ஐயனாரப்பன், வீரன் ஆகிய கோவில்கள் உள்ளன.
இக்கோவில்களில் நடைபெறும் கும்பாபிேஷக விழா நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜை நடந்தது.
இன்று (16ம் தேதி) காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை மற்றும் மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடக்கிறது. தொடர்ந்து, நாளை (17ம் தேதி) அதிகாலை 5:30 மணிக்கு நான்காம் கால பூஜை, 7:30 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 8:00 மணிக்கு ஐயனாரப்பன், வீரன் கோவில்களில் கும்பாபிேஷகம் நடக்கிறது.
9:00 மணிக்கு பிரசித்தி விநாயகர் கோவிலிலும், 10:15 மணிக்கு ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் 11:30 மணிக்கு கங்கையம்மன், எல்லையம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் நடக்கிறது.
