ADDED : பிப் 08, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெட்டி கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார், நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சண்முகாபுரம் பகுதியில் ஆய்வு செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த சரசு, 60; என்பவது பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர்.