தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூத்தாண்டவர் கோவில் கும்பாபிேஷகம்

 கூத்தாண்டவர் கோவில் கும்பாபிேஷகம்

 கூத்தாண்டவர் கோவில் கும்பாபிேஷகம்


ADDED : பிப் 28, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் கும்பாபிேஷகம் வரும் 8ம் தேதி நடக்கிறது.

வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, வரும் 6ம் தேதி, காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் விழா துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை நடக்கிறது.

7ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, திரவிய ேஹாமம், சகஸ்ர ஹோமம், மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 8ம் தேதி, காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, மூர்த்தி ஹோமத்தை தொடர்ந்து, 10:00 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us