/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கே.வி., டெக்ஸ் ஊழியர்கள் வெண்மை பேரணி
/
கே.வி., டெக்ஸ் ஊழியர்கள் வெண்மை பேரணி
ADDED : ஜன 06, 2026 04:15 AM

புதுச்சேரி: புதுச்சேரி கே.வி., டெக்ஸ் நிறுவனம் சார்பில், வேட்டி வாரத்தை முன்னிட்டு, ஊழியர்கள் வெண்மை பேரணி சென்றனர்.
வேட்டி வாரத்தை முன்னிட்டு, கே.வி., டெக்ஸ் சார்பில், ஊழியர்கள் நேற்று விழிப்புணர்வு பேரணி சென்றனர். வேட்டியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து சென்றனர்.
பேரணி காவிரி நகர் பகுதியில் இருந்து துவங்கி, இந்திரா சதுக்கம் அருகில் உள்ள கே.வி., டெக்ஸ் நிறுவனம் முன்பு நிறைவடைந்தது. இதில், நிறுவனத்தின் நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஊழியர்கள் வேட்டி அணிந்து பேரணி சென்ற போது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான ஆடைகள் மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கும் நோக்கில், வேட்டி அணிந்து வார விழா கொண்டாடப்படுவதாக கே.வி., டெக்ஸ் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

