ADDED : ஜூன் 01, 2026 09:27 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை சலவையாளர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.
லாஸ்பேட்டை தொகுதி சலவையாளர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், 141ம் ஆண்டு தொழிலாளர் தினம், சலவைத்துறை 50ம் ஆண்டு பொன்விழா மற்றும் சங்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா சலவையாளர் நகரில் நடந்தது.
சங்கத் தலைவர் சுப்ரமணியன், அவைத்தலைவர் பெருமாள், கவுரவ தலைவர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினர். மாசிலாமணி, இளங்கோ, ராஜேந்திரன், ஆறுமுகம், சுப்ரமணி, தில்லை, கண்ணன், முருகேசன், நடராஜன், தயாளன், எழிலரசன், மனோகரன், ரத்தினகுமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் பழனி வரவேற்றார்.
விழாவில் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
அவர் பேசுகையில், 'சலவையாளர் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர சட்டசபையில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்பகுதி மாணவ, மாணவிகள் கல்வி சார்ந்த உதவிகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார்.
பொருளாளர் கதிரவன் நன்றி கூறினார். முன்னதாக, மாணவிகளின் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது.
